World

கணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்! இளம் மனைவிக்கு நேர்ந்த அவலம்!!

இந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்துவாழ்ந்த மனைவியை, கணவர்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர்ஹர்கேஷ் குமார். இவர் மனைவி கவிதா குமாரி (28). தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர்திருமணம் நடந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஹர்கேஷ் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 2016-ல் தொழிலில் நஷ்டம்ஏற்பட்டது.

இதன் காரணமாக ஹர்கேஷ் போதை பழக்கத்துக்கு அடிமையானார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதன்பின்னர் தன்னை கொடுமை படுத்துவதாக கவிதா பொலிஸ் புகார் அளித்தார். அதே ஆண்டில் கணவரை பிரிந்த கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனதுஇரண்டு குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு தனது வீட்டருகில் கவிதா வந்துகொண்டிருந்தார்.அப்போது தனது இரண்டுநண்பர்களுடன் அங்கு வந்த ஹர்கேஷ் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்

பின்னர் தன்னிடம் இருந்ததுப்பாக்கியால் கவிதாவை சுட்டு விட்டு அங்கிருந்து ஹர்கேஷ் உட்பட மூவரும்தப்பியோடியுள்ளனர்.இதையடுத்து தோள்பட்டையில்குண்டடி பட்ட கவிதாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிரசிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளபொலிசார் ஹர்கேஷை தேடி வருகிறார்கள்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading