Lead NewsLocal

கூட்டமைப்பு எம்.பி. மஹிந்தவிடம் சரண்! ‘பல்டி’யடித்த வியாழேந்திரனுக்குப் பாதி அமைச்சு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த கூட்டணியில் சங்கமித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ள அவருக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலத்தில் சற்றுமுன்னர் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் மைத்திரி – மஹிந்த கூட்டணி வலைவிரித்துள்ள நிலையிலேயே அதில் வியாழேந்திரன் எம்.பி. சிக்கியுள்ளார்.

வியாழேந்திரன் கடந்த நாடாளுமன்றத்தில் தேர்தலில் புளொட் அமைப்பின் சார்பில் கூட்டமைப்பில் போட்டியிட்டு எம்.பியாகத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading