EastLocal

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தேசப்பற்றை வெளிப்படுத்திய ஹில்புல்லாஹ்!

கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடை பெற்றது.
கிழக்கு மாகாண பிரதம செயலகமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப் மரியாதையும் கலை நிகழ்வும் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான நஜீப் அப்துல் மஜீத் உள்ளிட்ட பிரமுகர்களும், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கொட்டும் மழையிலும் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இந்றைய நிகழ்வில் எவ்வித மழைத்தடுப்புகளையும் பயண்படுத்தாது செயற்பட்டமை பலரையும் வியப்பூட்டியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading