Local

சம்பந்தன், சுமந்திரன் வெளியேற வேண்டும்! – இப்படிக் கூறுகின்றார் விக்கி

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், அவசியங்களில் இருந்து எட்டியே இருக்கின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால் எமது அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம். எம் மக்களின் உண்மையான அரசியல் நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்ளும் கட்டத்தில் – நிலையில் அவர்கள் இல்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. தங்களது கருத்து மட்டுமே சரியென்ற மனோநிலையில்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.”

– இப்படி விசனத்துடன் கூறியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

“மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading