Local

சுவிஸ் விபத்தில் தமிழ் ஆசிரியை பலி!

சுவிஸ்ர்லாந்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியை ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப் பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான  சர்வாணி சுரேஸ்குமார் ( 43 வயது ) அகால மரணமானார்.

ஓவ்வொரு புதன்கிழமை பிற்பகலில் தமிழ் பாடசாலை நடைபெறுவது வழக்கமாகும். இன்று பிற்பகல் அவர் தனது காரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கனரக வாகனம் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கனரக வாகன சாரதியான 22வயது நபரும் காயமடைந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading