Lead NewsLocal

ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது! எதிரான மனுக்களை நிராகரிக்குக!! – உயர்நீதிமன்றில் சட்டமா அதிபர் கோரிக்கை

நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் யாவும் நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையானது அரசமைப்பை மீறும் நடவடிக்கை எனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றில் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading