Local

தனியார் விடுதிகளில் அரச கூட்டங்களுக்குத் தடை! – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகளுக்கு அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, எந்தவொரு அரச நிகழ்வையும் தனியார் விடுதிகளில் நடத்தக் கூடாது என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அரசுக்குச் சொந்தமான அரங்குகள் மற்றும் நிறுவகங்களில் மாத்திரமே, அரச நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading