Lead News

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் நேற்றுக் காலையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் மேற்கொள்ளும் 5 ஆவது உண்ணாவிரதப் போராட்டமாகும்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான, ம.சுலக்ஷன், இ.திருவருள், சூ.ஜெயசந்திரன், இரா.தபோரூபன், சி.தில்லைராஜ், இ.ஜெகன், சி.சிவசீலன், த.நிமலன் ஆகியோரே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தாம் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், தம்மை விடுவிப்பதில் ஏதாவது சட்டச் சிக்கல் இருக்குமாக இருந்தால் குறுகிய கால மறுவாழ்வு வழங்கியாவது விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்தே போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading