LocalNorth

தியாக தீபம் திலீபனுக்கு சுமந்திரன் எம்.பி. அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வார ஆரம்ப நிகழ்வு யாழ். வடமராட்சி, கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். திலீபனின் நினைவு தினம் யாழ்.குடாநாட்டின் பல இடங்களிலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வின்போது கே.ரி. பவுண்டேசன் ஸ்தாபகர் தனது சொந்த நிதியிலிருந்து பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றுக்கு நிதியுதவிகளை வழங்கியமையுடன் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் திட்டங்களைக் கையளித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading