Up Country

தொழிலாளர்களுக்காக ஆசிரியர் படையும் கொட்டகலையில் போராட்டம்!

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்கள் நேற்று முன்தினம் 26.10.2018 போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கொட்டகலை நகரின் மத்தியில் பதாதைகளை ஏற்திய வண்ணம் ஆசிரியர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பேரணியாக வருகை தந்த ஆசிரியர்கள் கொட்டகலை நகரின் மத்தியில் ஒன்றுகூடினர்.

தோட்டப்புற மாணவர்களின் கல்வி பின்னடைவில் குடும்ப பொருளாதார சூழ்நிலை அதிகளவு தாக்கம் செலுத்துகின்றது. பல மாணவர்கள் கல்வியின் பால் அக்கறை செலுத்தாது இடைவிலகலுக்கும் வேலை வாய்பை தேடுவதற்கும் குடும்ப பொருளாதார நிலைமைகளே தாக்கம் செலுத்துகிறது.

எனவே தோட்டப்பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி நிலை மேம்படுவதற்கு அவர்களின் பெற்றோரின் வேதனம் அதிகரிக்கப்படவேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கொட்டகலை நிருபர் தி.தவராஜ்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading