Local

நாமல் குமாரவின் அலைபேசியுடன் ஹொங்கொங்குக்கு விரைந்த குழு!

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கொலைச் சதித் திட்டம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக குழு ஒன்று ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளது.

இந்தக் குழுவில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு குறித்த மூவரும் ஹொங்கொங் நோக்கிச் சென்றுள்ளனர்.

நாமல் குமாரவின் தொலைபேசியுடன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading