World

நீங்கள் வைத்த உண்டியலைப் போன்று எங்களைப் பயன்படுத்த வேண்டாம் – ட்ரம்ப் ஆக்ரோஷம்

அமெரிக்காவிடம் இருந்து சீனா ஒரே ஆண்டில் 3.5 கோடி ரூபாவை சுரண்டி சேர்த்து தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளது, அமெரிக்காவை உண்டியலை போன்று, இந்தியா, சீனா போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

அண்மையில் இரு நாடுகளும் மற்றைய நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதித்தன. இதனால் உலகளாவிய ‘வர்த்தகப் போர்’ நடைபெறும் சூழல் உருவானது. இந்த நிலையில் சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக சீனாவின் இணையத் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பல நாடுகளும் விமர்சித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அந்நாட்டு செய்தி ஊடகங்களுக்கு கூறியதாவது:

‘‘சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தமை குறித்து சிலர் குறை கூறுகின்றனர். ஆனால் உலக சந்தையில் அமெரிக்க பொருட்களை பின்நோக்கித்தள்ள பல நாடுகள் சதி செய்கின்றன. அமெரிக்காவில் எந்த வரியும் இல்லாமல் சீனா பொருட்களை விற்பனை செய்து பல கோடிகளை குவித்து வருகிறது.

ஒரு ஆண்டில் மட்டும் 35 லட்சம் கோடி அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து சீனா இலாபம் சம்பாதித்துள்ளது. இதையேதான் இந்தியா செய்கிறது. ஐரோப்பிய நாடுகள் செய்கின்றன. எங்களை ‘பிக்கி பேங்கா’ (உண்டியல்) போல பயன்படுத்துகின்றனர். தங்களின் பணத் தேவைக்கு எங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது’’ – என தெரவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading