LocalNorth

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு! அரசியல் கைதிகளை விடுதலை செய்!! – கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு’, ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் கண்டனக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “சட்டப் பூட்டை உடை”, “அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “நல்லிணக்கத்துக்கான முதலாவதுபடி அரசியல் கைதிகளின் விடுதலையே”, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம்”, “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே இலங்கயில் நல்லிணக்கம்”, “எதற்காக இன்னும் அரசியல் கைதிகளுக்குத் தண்டனை?”, “ஏன் இன்னும் அரசியல் கைதிகள் சிறையில்? அவர்களை உடன் விடுதலை செய்?”, “அரசியல் கைதிகளை விடுவித்து தமிழர் மனங்களை வெற்றிகொள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததோடு கோஷங்களையும் எழுப்பியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading