LocalUp Country

மனைவியைக் கோரமாகக் கொன்ற கணவன் கழுத்தறுத்துத் தற்கொலைக்கு முயற்சி!

மனைவியைத் தாக்கிக் கோரமாகக் கொலைசெய்த கணவன், கத்தியொன்றால் தனது கழுத்தையும் வெட்டிக் கொண்ட நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிராந்துருகோட்டையைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய நிரோசா சுபாசினி என்ற பெண்ணே கணவனினால் கொலைசெய்யப்பட்டவராவார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

கொலையுண்ட பெண்ணின் கணவனைக் கைதுசெய்ய பொலிஸார் முயன்ற வேளையில், அந்நபர் கத்தியொன்றை எடுத்து, தனது கழுத்தை வெட்டிக்கொண்டார். உடனடியாக, மகியங்கனை வைத்தியசாலைக்கு அவர் எடுத்துசெல்லப்பட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading