Local

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கமாட்டோம்! மஹிந்தவே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்!! – நாமல் கூறுகின்றார்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அடியோடு நிராகரிப்பதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் எனவும் அவர் கூறினார்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது உரிய முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலையியல் கட்டளைகளை சபாநாயகர் மீறியிருக்கின்றார் எனவும், சட்டவிரோதமான இந்த வாக்கெடுப்பை தாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வாக்கெடுப்பை நிராகரிப்பதால், மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராகப் பதவியில் நீடிப்பார் என்றும், அவரது அரசு தொடர்ந்து பதவியில் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது எனவும், மஹிந்த உள்ளிட்ட அணியினர் உடன் பதவி விலக வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading