Local

வதந்திகளை நம்ப வேண்டாம்! – அரச தகவல் திணைக்களமும் அறிக்கை

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாகத் தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்குத் தயாராகுவதாக உண்மைக்குப் புறம்பான பிரசாரத்தை முன்னெடுப்பதற்குத் தற்போது சில திட்டமிட்ட குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், உண்மைக்குப் புறப்பான மற்றும் அடிப்படையற்ற இந்த பிரசாரத்தை முற்றிலும் நிராகரிப்பதாக அரசு இதன் மூலம் அறிவுத்துகின்றது” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading