Local

வதைக்கின்றது வறட்சி! 7 இலட்சம் பேர் பரிதவிப்பு!!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் 06 இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரண்டு இலட்சம் குடும்பவங்கள் பரிதவிக்கின்றன. அத்துடன், குளங்கள், ஆறுகளின் நீர்மட்டமும் சடுதியாக குறைவடைந்துள்ளதால் தாவரங்களும் செத்துமடிவதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சியால் வடக்கு மாகாணத்தில் 3 இலட்சத்து 57 ஆயிரத்து 736 பேரும், கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 63 பேரும், வடமேல்மாகாணத்தில் 64 ஆயிரம் பேரும், வடமத்தியமாகாணத்தில் 56 ஆயிரம் பேரும், மத்தியமாகாணத்தில் 18 ஆயிரத்து 400 பேரும், தென்மாகாணத்தில் 19 ஆயிரம் பேரும் என நாட்டில் மொத்தமாக 6 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading