Lead NewsNorth

வவுனியாவில் கோர விபத்து! ரயிலுடன் மோதுண்டது கார்!! – 4 பெண்கள் பலி!!!

வவுனியா, ஓமந்தை – பன்றிக்கெய்த குளம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்; 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் கார் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். அதில் பயணித்த 8 பேரில் பலியான நால்வரும் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காரின் சாரதியும் சிறுவன் ஒருவரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading