Local

வியாழனன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை விசேட கட்சித் தலைவர் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின்போது, மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

இதன்படி மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை விரைவில் சபாநாயகருக்கு கையளிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading