Local

ஹெரோயினுடன் பெண் உட்பட 7 பேர் சிக்கினர் பொலிஸாரிடம்!

கொடஹென பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 249 கிராம் ஹெரோயினுடன் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிபுலாகல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மோதர, கல்கிஸை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் வைத்து ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 31 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading