Gossip

அக்காவை கர்ப்பமாக்கிய 13 வயது சகோதரன்!

இந்தியாவில் 13 வயது சிறுவன், தன்னுடைய 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்த மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்களுக்கு செல்போன்களை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். அப்படி வாங்கிக் கொடுக்கும் செல்போன்களை மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு மட்டும் பயன்படுத்தாமல், தேவையில்லாத வீடியோக்களை எல்லாம் பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானில் 13 வயது சிறுவன் தன்னுடைய 15 வயது சகோதரியுடன் ஆன்லைன் வகுப்பை கவனித்து வந்துள்ளனர்.

இருவரும், ஒன்றாக சேர்ந்து மொபைல் போனில் படித்து வந்த நிலையில், அவ்வப்போது செல்போனில் ஆபாச படங்களை இருவரும் பார்த்துள்ளனர். அதன்பின், இருவரும் ஆபாச படங்களில் வரும் காட்சிகளை பார்த்து, எல்லை மீறி நடந்துள்ளனர்.

சில மாதங்களுக்குப் பிறகு, சிறுமியின் பாட்டி, பேத்தியின் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்தார். அந்த சமயத்தில் சிறுமியும் அவ்வப்போது வாந்தி எடுத்து வந்துள்ளார்.

அடிக்கடி சோர்ந்த நிலையில் படுத்தே இருந்தார். சந்தேகமடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைய, இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு 13 வயது தம்பி தான் காரணம் என்பது உறுதியானது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சகோதரன் மற்றும் பாதிக்கப்பட்ட சகோதரி ஆகிய இருவரின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சகோதரன், சகோதரி ஆகிய இருவருக்கும் இதுபற்றி எந்த புரிதலும் இல்லை. இருப்பினும் தெரியாமல் செய்யும் தவறுகளால் இது போன்ற நிலை ஏற்படுவதால், குழந்தைகள் வீட்டில் ஆன்லைனில் படிக்கும் போது, பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்று பொலிசார் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading