World

அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்-மூக்கில் இரத்தம் வடிந்து உயிரிழக்கும் மக்கள்!

ஈராக் நாட்டில், மூக்கில் இருந்து இரத்தம் வடியச் செய்யும் புதுவித காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இந்த காய்ச்சல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல், கிரிமியன் – காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்றழைக்கப்படுகிறது.

சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருவதாகவும், பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூக்கின் வழியாக அதிகளவு ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும், இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் ஐந்தில் இருவர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.

ஒரு விதமான உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படும் போது, அதன் மூலம் மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இதுவரையில் இந்த காய்ச்சலுக்கு தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்றைய தினம் வெளியாகிய செய்திக்கமைய இந்த காய்ச்சல் மரணங்களை தீவிரப்படுத்த வாய்ப்புகள் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading