Lead News

அடங்காத கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6000ஐ தாண்டியது

சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. வெளிநாட்டினருக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நாடு முழுவதும் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, வங்கதேசம் இடையேயான பஸ், ரயில் போக்குவரத்து நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவில் 50 மாகாணங்களில் 46ல் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,000ஐ நெருங்கிக்  கொண்டிருக்கிறது. இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பதால், அங்கு தேசிய அவசரநிலையை அதிபர் டிரம்ப் நேற்று பிரகடனப்படுத்தினார்.

இதற்கிடையே, உலக முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,068 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு சீனாவில் -3,199, இத்தாலி-1,441, ஈரான்-724, ஸ்பெயின் -291, இந்தியா-2 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading