Local

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று காலை 10 மணிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுடன் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading