Local

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சாத்தியமாகுமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

தேர்தல்முறை மறுசீரமைப்பு யோசனை ஊடாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிகள் எடுத்துவருதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் பின்புலத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading