Sports

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (21) இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி துடுப்டுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 70 ஓட்டங்களை சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் பெற்றதுடன் லோகன் வான் பீக் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

அதன்படி, 263 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading