World

அதிக சத்தத்தோடு கேம் விளையாடிய சிறுவன் மயங்கி உயிரிழப்பு!

சீனாவின் டிக்டாக் உட்பட பல செயலிகளை தடை செய்து அண்மையில் மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டால் 12ம் வகுப்பு படிக்கும் மாணவனின் உயிர் பறிக்கப்பட்ட சோக சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பயர்வால் ஜீரோ ஹவர் என்ற விளையாட்டு pubg போல் மீண்டும் இளைஞர்களை குறிவைக்க தொடங்கியுள்ளது. இந்த விளையாட்டிற்கு முதன் முறையாக புதுச்சேரியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் தர்ஷன் பலியாகியுள்ளார்.

பால் வியாபாரம் செய்து வருகிறார் இவரது தந்தை. 16 வயதான தர்ஷன் 12 ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

பயர்வால் என்ற ஆன்லைன் விளையாட்டு அந்த விளையாட்டிற்கு அடிமையான தர்ஷன் மணிக்கணக்கில் விளையாட ஆரம்பித்துள்ளார். அதைப் பார்த்த பெற்றோர் அடிக்கடி மகனைக் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

, காதுகளில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு விளையாட்டின் சத்தத்தை அவர் அதிகமாக வைத்து விளையாடிக் கொண்டு தொடர்ந்து 4 மணிநேரம் தர்ஷன் பயர்வால் விளையாடியுள்ளார். இதனால் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading