Local

இன்று முதல் சவுதியில் வெளிநாட்டவர்கள் நுழைவதற்குத் தடை!

சவுதியில் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 20 நாடுகளிலிருந்து சவுதி வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

20 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் தொழிலாளர்கள், தூதர்கள் உட்பட அனைவருக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட நாடுகள்?
?இந்தியா
?யுஏஇ
?அமெரிக்கா
?ஜெர்மனி
?அர்ஜென்டினா
?இந்தோனேசியா
?அயர்லாந்து
?இத்தாலி
?பாகிஸ்தான்
?பிரேசில்
?போர்ச்சுகல்
?இங்கிலாந்து
?துருக்கி
?தென்னாப்பிரிக்கா
?சுவீடன்
?சுவிட்சர்லாந்து
?பிரான்ஸ்
?போர்ச்சுகல்
?லெபனான்
?எகிப்து
?ஜப்பான்
ஆகியவை அடங்கும். இந்த தடை இன்று புதன்கிழமை இரவு 9 மணி முதல் அமலுக்கு வரும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள 20 நாடுகள் அல்லாமல் வேறு நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி விட்டு சவுதிக்கு வருவதற்கு அனுமதி உள்ளது. (Bahrain, oman, Kuwait, Qatar, srilanka போன்ற நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி விட்டு சவுதிக்கு வரலாம்)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading