Local

அது நான் இல்லை நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

கட்டாரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் தாம் அங்கத்துவம் பெற்றுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது பெயரில் வேறு சிலரும் இருக்கலாம், ஆனால் அது கண்டிப்பாக தான் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சமூக வலைத்தள கணக்கில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளாரி்.

இந்த நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading