Local

அநுராதபுர சிறைச்சாலையில் கலவரம் பொலிஸார் குவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதையடுத்து சிறைச்சாலையில் பெரும் கலவரம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது.

இச்சம்பவத்தையடுத்து ஏனைய கைதிகள் தமக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து சிறைக்கூடங்களைத் தகர்த்துக்கொண்டு வெளியேறி முற்றத்தில் குவிந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சுமார் 900 கைதிகள் தம்மை வெளியே விடுமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்திருப்பதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் அங்கிருந்து வெளியேறியதையடுத்து, விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக அங்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

அதிரடிப்படையினர் வானததை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்வதுடன், கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading