Local

அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து வருகிறது மின்சார சபை தெரிவிப்பு!

பல அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பாவனையைக் குறைத்துக் கொள்ளுமாறும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், களனிதிஸ்ஸ அனல் மின்நிலையத்தில் டீசல் வேகமாக தீர்ந்து வருவதாகவும், தேசிய மின்கட்டமைப்பில் 149 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொலன்னாவ, மத்துகம, துல்ஹிரிய உள்ளிட்ட பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க அதிகாரிகளால் முடியவில்லை எனவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், புதன்கிழமை (9) இரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு உலை எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தாங்கிகளில் இருந்து உலை எண்ணெய் இறக்கும் பணி இன்று காலை ஆரம்பமாகியதாக எரிசக்தி அமைச்சரின் செயலாளரான கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading