அனிருத் திருமணத்திற்கான மொத்தச் செலவு ரூ.150 கோடியா?
Did Anirudh and Kavya Maran Spend Rs.150 Crore on Their Wedding : தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருப்பவருமான காவ்யா மாறனும் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி கிரீஸ் நாட்டில் இருவருக்கும் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றத நிலையில், இதனைத் தொடர்ந்து, சென்னையில் கடந்த நவம்பர் 21ஆம் திகதி முதல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

தமிழக முதலமைச்சர் விஜய், ரஜினிகாந்த், ஸ்டாலின், நடிகர் அஜித், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி உள்ளிட்ட பலரும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்டங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள மற்றுமொரு விடயம் இந்தத் திருமணத்திற்காகச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செலவுத் தொகையாகும்.
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்காக மாத்திரம் சுமார் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் நடைபெற்றுவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்காக மேலும் 50 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, அனிருத் – காவ்யா மாறன் திருமண நிகழ்வுகளுக்கான மொத்தச் செலவு சுமார் 150 கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, தொழிலதிபர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக வெளியாகிய தகவல்கள் பெரும் பேசுபொருளாகின.

அந்த வகையில், தற்போது அனிருத் – காவ்யா மாறன் திருமணத்திற்காகக் கூறப்படும் பிரம்மாண்டமான செலவுத் தொகையும் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்க்கும் விடயமாக மாறியுள்ளது.
இருப்பினும், அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்காகச் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் இந்த 150 கோடி ரூபாய் தொடர்பான தகவல்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.