Local

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள பின்புலத்தில் தபால் சேவைகளை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு, தபால் திணைக்களம் தனது ஊழியர்களின் சகல விடுமுறைகளையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 08, 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகங்களை விற்பனை செய்ய அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக இன்று (07) முற்பகல் அறிவித்தனர்.

இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading