Local

அன்று தமிழர்கள் இன்று முஸ்லிம்கள் அடுத்ததாக உங்கள் சொந்த இனமே பலியாகும்!

தமிழர்களை அழித்தீர்கள்  இன்று முஸ்லீம்கள் இலக்காகியுள்ளனர்  அடுத்ததாக உங்கள் சொந்த இனமே பலியாகும்  என எச்சரித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைப்புலிகளை அழித்ததால் உங்களிற்கு கிடைத்தது
என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலத்தை சிந்திக்காது போனால் இனியும் இது ஐக்கிய இலங்கையாக இருக்காது  ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால்  நாடு பூஜ்ஜியமாக  மாறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஒற்றையாட்சி  சிங்கள பௌத்த நாடு என்ற  சிந்தனையில்  ஏனைய இனத்தவர்களை  எதிரியாக கருதும்  மனநிலையில் ஆட்சியாளர்கள்  இனியும் பயணிப்பாளர்கள் என்றால் ஒருபோதும் இலங்கை நாடாக மீள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading