World

அமெரிக்காவின் பெருமைக்குரிய கட்டிடம் தீபாவளியை கொண்டாடியது!

அமெரிக்காவின் பெருமைக்குரிய கட்டடங்களில் ஒன்றான நியூயோர்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் தீபாவளித் திருநாளை கொண்டாடும் நோக்கத்துடன் ஆரஞ்சி நிறத்தில் ஒளிர்ந்தது. அந்த கண்கொள்ளாக் காட்சியை அமெரிக்க மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்திய அமைப்புகளின் கூட்டமைப்பு, நியூஜெர்ஸி மற்றும் கனக்டிக்கட் மாகாணங்களில் சமூக அமைப்புகள் எம்பயர் ஸ்டேட் கட்டடத்துடன் இணைந்து விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.

எம்பயர் ஸ்டேட் கட்டத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி தீபாவளி எனக் குறிப்பிடப்பட்டு, தீபாவளித் திருநாளை முன்னிட்டும் எம்பயர் கட்டடம் ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிரும் எனப் பதிவிடப்பட்டது.

தீபாவளி தினத்தன்று நியூஜெர்சி, நியூயார்க் மற்றும் நியூ கனெக்டிக்கட் மாகாணங்களில் இந்தியப் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், 10 ஆயிரம் பேருக்கு சுவையான விருந்து அளிக்கப்பட்டது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading