Local

அமெரிக்காவின் பொருளாதார தடை பட்டியலில் இலங்கை!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளது.

குளோபல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி அமெரிக்காவினால் இவ்வாறு இலங்கையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தன்னிச்சையான மீளாய்வை செய்தல் என்ற கருத்தை வைத்து அமெரிக்கா இதர நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும் அந்த டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, இலங்கை, சீனா உட்பட 27 நாடுகள் அமெரிக்காவின் இந்த பொருளாதாரத்தடை பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading