Local

அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேர்கள் பலியாகக்கூடும்?

அமெரிக்காவில் பரவி வரும் கொரோனா கிருமித்தொற்றுக்கு, ஏறக்குறைய 200ஆயிரம் பேராவது பலியாகக்கூடும் என்று அந்நாட்டு தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபௌசி, மில்லியன் கணக்கானோர் கிருமித்தொற்றால் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்றார்.
வேகமாக பரவி வரும் கொரோனா கிருமிக்கு எந்த மாநிலமும் எந்த நகரமும் தப்பாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்டு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூ யார்க், நியூ ஜர்சி ஆகிய மாநிலங்களில் உள்ளவர்கள், இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும்படி டாக்டர் ஃபௌசி அறிவுறுத்தினார்.
அதையடுத்து, தேவை ஏற்பட்டாலொழிய வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற உத்தரவை அமெரிக்க அரசாங்கம் அடுத்த 14 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

அமெரிக்காவில், இதுவரை 135,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
கிட்டத்தட்ட 2,400 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading