World

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு!

சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்த நகரில்தான் ஆரம்பமானது. பின்னர், நாளுக்குநாள் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

அதோடு, மற்ற நாடுகளுக்கும் பரவி உலகளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். எனவே, இதனிடையே, அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கி வரும் இந்த வைரஸ் காய்ச்சலை ஒழிக்க சீனா அரசு போர்க்கால நடவடிக்கையை எடுத்தது. அதேவேளையில், இந்தியா உள்பட பிறநாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உலகம் முழுவதும் தற்போது 2வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் #அமெரிக்காவில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 343,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை –19,775,350 ஆக அதிகரித்துள்ளது. 11,659,956  பேர்  குணமடைந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading