World

அமெரிக்காவை தாக்கும் புதிய வகை Monkeypox நோய்!

Monkeypox என்ற இந்த அரிய நோய் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில்  வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெக்சாசில் வசிக்கும் ஒருவருக்கு ஆபத்தான வைரஸான மங்கிபாக்சின் (Monkeypox) அறிகுறிகள் இருப்பதாக பதிவாகியுள்ளன.யுஎஸ்ஏ டுடேயில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, Monkeypox நோயால் பொது மக்களுக்கு ஆபத்து குறைவாகவே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் சமீபத்தில்தான் ஆப்பிரிக்கா (நைஜீரியா) சென்றிருந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நோயாளி டல்லாஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பிற ஏஜென்சிகள் அந்த நபருடன் தொடர்பு கொண்ட நபர்களைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ளன.இந்த நோய் பரவாமல் தடுக்க அதிக அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சி.டி.சி-யின் படி, Monkeypox வைரஸ் பெரியம்மை வைரஸ்களின் வகைகளைச் சேர்ந்தது. ஆனால் இது ஒரு அரிய நோயாகும். இதில், நோயாளிக்கு முகம் மற்றும் உடல் முழுவதும் தடிப்புகள் மற்றும் சொறி ஏற்படுகிறது.இந்த தொற்று 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். இது லேசான தொற்றுநோயை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.இந்த Monkeypox வைரஸ் நோய் விலங்குகளால் கடிக்கப்படுவதாலோ அல்லது அவற்றுடன் தொடர்பு கொள்வதாலோ ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading