Uncategorized

அமெரிக்கா – ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமக்குத் தெரியாமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பிரதமருக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ஈரானுடன் அவ்வாறான எந்தவொரு இரகசியப் பேச்சுவார்த்தையையும் தாம் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் எதிர்பார்க்கும் இராணுவ இலக்குகளை அடைவதற்கு முன்னதாகவே போர் முடிவுக்கு வந்துவிடுமோ என நெதன்யாகு அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானியப் புலனாய்வுப் பிரிவினர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) அமைப்பைத் தொடர்புகொண்டு, போரை நிறுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக ‘நியூயோர்க் டைம்ஸ்’  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading