அமெரிக்கா சர்வதேச வல்லரசு என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயம்!

1946 பொருளாதார நிலை எப்படி இருந்ததோ அதே நிலைக்கு அமேரிக்கா சென்றிவிடும்
கொரோனா வைரஸின் தாக்கத்தால் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அமேரிக்கா சர்வதேச வல்லரசு என்ற அந்தஸ்தை இழக்கும் என்றும் பொருளாதாரத்தில் 75 வருடங்கள் பின் நோக்கிச் செல்லும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கொரோன வைரஸின் தாக்குதல் இடம்பெற்று வருகிறது.
இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தினமும் ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் மரணங்கள் சம்பவிக்கின்றன.
அமேரிக்கா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பெரும் வர்த்தக நகரான நிவ்யோர்க் முற்றாக முடங்கியுள்ளது.
1946 பொருளாதார நிலை எப்படி இருந்ததோ அதே நிலைக்கு அமேரிக்கா சென்றிவிடும் என்று உலகின் மிகப் பெரிய பொருளாதார ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
2020 முடிவில் 5.5 வீத பொருளாதார சரிவு ஏற்படும் என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது
