World

அமெரிக்க அரசுத் துறை முடக்கம்…!!!

அமெரிக்காவில் குடிவரவு அமுலாக்க முகமைகளுக்கான (ICE and CBP) நிதியை ஒதுக்கீடு செய்து, நீண்டகாலமாக நிலவி வரும் அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியத் தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுமார் 50-48 என்ற வாக்கு கணக்கில் குடியரசுக் கட்சியினர் தங்களது பெரும்பான்மையைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானத்தைப் பாதுகாத்துள்ளனர்.

நிதி முடக்கத்தால் விமான நிலையங்களில் பாதுகாப்பு

மினசோட்டாவில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என ஜனநாயகக் கட்சியினர் பிடிவாதம் காட்டியதால் கடந்த பெப்ரவரி 14 முதல் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) எவ்வித நிதியுமின்றி முடங்கியுள்ளது.

அமெரிக்க அரசுத் துறை முடக்கம் | Us Government Shutdown

அமெரிக்க வரலாற்றில் ஒரு அரசுத் துறை இவ்வளவு நீண்ட காலம் முடங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க மே மாதம் முதல் வாரத்திற்கு மட்டுமே நிதி உள்ளதாகவும், ஜூன் 1ஆம் திகதிக்குள் நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் கையெழுத்திட வேண்டும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.

செனட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இப்போது பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்குச் செல்லவுள்ளது. அங்கு குடியரசுக் கட்சியினரிடையே நிலவும் மாறுபட்ட கருத்துக்களால் இந்த மசோதா நிறைவேற காலதாமதம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிதி முடக்கத்தால் ஏற்கனவே விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், தற்போதைய செனட் சபையின் நகர்வு ஒரு சாதகமான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading