அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஈராக்கில் மாயம்!!
ஈராக் – பாக்தாத்தில் அமெரிக்கப் பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டிலெசன் நேற்று (மார்ச் 31) மாலை கடத்தப்பட்டுள்ளார்.
பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்ற இவரை, மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈராக் பாதுகாப்புப் படையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்திற்கொண்டு, ஷெல்லி கிட்டிலெசன் ஈராக்கிற்குச் செல்ல வேண்டாம் என்றும், அது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அமெரிக்க அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையையும் மீறி அவர் அங்கு சென்றிருந்த நிலையிலேயே இந்தக் கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

You must be logged in to post a comment.