அமெரிக்க வரிவிதிப்பால் ஜேர்மனி பக்கம் திரும்பும் சீன தயாரிப்புகள்
அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அந்நாடு கூடுதல் வரிகள் விதிப்பதால், அந்த தயாரிப்புகள் ஜேர்மனியை நோக்கி திரும்பிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனி பக்கம் திரும்பும் சீன தயாரிப்புகள்
Institute for Employment Research (IAB) என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக ராய்ச்சர்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அவ்வகையில், கடந்த அக்டோபர் முதல் இந்த ஜூன் வரையிலான காலகட்டத்தில் தாமிரம் 91 சதவிகிதமும், ஆடைகள் 24 சதவிகிதமும், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை 12 சதவிகிதமும் கூடுதலாக சீனாவிலிருந்து ஜேர்மனிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக IAB ஆய்வு தெரிவிக்கிறது.

You must be logged in to post a comment.