Local

அமேசான் ஊழியர்கள் 20,000 பேருக்கு கொரோனா!


பெரிய நாடு, சிறிய நாடு என்ற எந்த பாரபட்சமுமின்றி உலக நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளது கொரோனா. ‘வல்லரசு’ நாடு என்று பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்க போன்ற நாடுகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள 27 மாகாணங்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தைவிட செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 71 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த 20,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மொத்த அமெரிக்க மக்கள்தொகையில் குறைவுதான். எங்களைப் போன்ற பெரிய நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று இருந்தால் அதன் எண்ணிக்கையை வெளியிட வேண்டும். இது மக்களுக்கும் அரசுக்கும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading