Local

அமைச்சர்களிடம் ஆடம்பர வாகனம் இல்லையாம்!

மக்கள் நினைக்கும் அளவுக்கு அமைச்சர்களிடம் ஆடம்பர வாகனங்கள் இல்லை என ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களே அமைச்சர்களுக்கு கிடைத்தன.

அந்த வாகனங்கள் சுமார் 10 ஆண்டுகள் பழமையானவை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர்.

இதனால், அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் ஏதாவது ஒன்றை வழங்கும் போது மக்கள் அது பற்றி குரோத மனப்பான்மையில் பேசுவது தவறு எனவும் கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading