Local

அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம்!

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் – 19 நிதியத்திற்காக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தையும் கொவிட் உதவித் திட்டத்திற்கு வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading