Local

அமைச்சர்கள் பலர் தனிமைப்படுத்தலில்?

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சினால் இதுதொடர்பிலான அறிவித்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சரும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகரவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்
காலி – ஹிக்கடுவ பகுதியிலுள்ள விடுதியொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருடன் அண்மைக்காலமாக நெருங்கியிருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சுகாதார அமைச்சின் ஊடாக ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading