Local

குர்ஆனில் இறந்தவர்களின் உடலை புதைப்பது கட்டாயமென கூறப்படவில்லையாம் கம்மன்பில கண்டுபிடிப்பு!

இலங்கையில் எவரும் கொரொனா தொற்றினால் உயிர்ழக்கக் கூடாது என நாம் முயற்சித்துத் கொண்டுள்ளோம்.

ஆனால் எதிர்க்கட்சியினர் ஒருவர் இறந்தால் அவரை புதைப்பதா எரிப்பதா என விவாதித்துக் கொண்டுள்ளனர். என அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றில் தெரிவித்தார்.

மரணித்தவர்களை புதைப்பது குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள போதிலும் அது கட்டாயமானது என எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று(8) வெள்ளிக்கிழமை கோவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading