Local

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொலை அச்சுறுத்தல் குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவை கத்தியால் குத்திக் கொலை செய்வதாக அச்சுறுத்தும் வகையில் அவருக்குக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர் ஒருவரைக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு – இராஜகிரியப் பகுதியில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரியும் 29 வயதான இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 72 மணி நேரத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading